மட்டகளப்பு கடலில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
486

கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மட்டகளப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் இடம்பெற்றுள்ளது.  

மட்டகளப்பு – ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேஸ் விமலராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று(07) மாலை ஏறாவூர் கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருதாக தெரிவித்துள்ளனர்.