மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன் – சமல் ராஜபக்ஷ

0
445

மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தன்னால் இன்னும் கிராமத்திற்கு செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலகுவதில் அர்த்தமில்லை எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் நிதியை கடுமையாக கையளிப்பதை எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கும் மக்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் அதற்கு அரசாங்கம் வழங்கும் பதில்கள் போதுமானதாக இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.