மக்களுக்கு விரைவில் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம்!

0
362

கஷ்டங்களுககு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு விரைவில் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் கஷ்டம் நிலவினாலும் மக்களின் நிவாரணங்களை குறைக்க எதிர்பார்க்கவில்லை.

எவரும் விமர்சனங்களை முன்வைக்க முடியும். விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது அவற்றை செய்ய தவறுகின்றனர்.

வரலாற்று முழுவதும் இப்படியான சம்பவங்களை பார்க்க முடியும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.