மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!-படங்களுடன்

0
548

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.