பெற்ற பிள்ளையை நாய் போல கயிறு கட்டி இழுத்த தாய்; வீடியோவால் அதிர்ந்த நெட்டிசன்கள்

0
21

இந்தியப் பெண் ஒருவர் நியூயார்க் நகரத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த போது தனது குழந்தையை நாய் போல கயிற்றில் கட்டி உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

நாய்க்கு எப்படிக் கழுத்தில் கயிற்றை மாட்டுவார்களோ அதுபோல இந்தக் குழந்தைக்கு கைகளில் கயிற்றை கட்டி உடன் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விமர்சனத்தைப் பெற்ற நிலையில் இது தொடர்பாக அந்தப் பெண் விளக்கம அளித்துள்ளார். 

கனடாவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான சுபாங்கி ஜகோட்டா, நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் தனது 3.5 வயது மகன் மகிழ்ச்சியுடன் ஓடி குதித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டார். ஆனால் அதில் அவரது மகனை கயிறு மூலம் தந்தையுடன் கட்டியிருந்தனர்.

நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது கண்ட்ரோலில் வைத்திருக்க இதுபோல கயிற்றைக் கட்டுவார்கள். இதை ஆங்கிலத்தில் லீஷ் என்பார்கள். அதுபோலத் தான் இந்தப் பெண் தனது குழந்தையின் கையில் கயிற்றைக் கட்டி அதைத் தந்தையுடன் பாதுகாப்பாக இணைத்திருந்தார்.

அந்தப் பெண்ணே தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைக்கு லீஷ் பயன்படுத்தியதால் வெட்கப்படவில்லை என்றும் அது சிறந்த முடிவு என்றும் ஜகோட்டா தெரிவித்தார். இது இணையத்தில் ஒரு விவாதத்தையே கிளப்பியுள்ளது.

இந்த லீஷ் அவர்களின் குழந்தையைத் தொலைந்து போகாமல் வழிதவறிப் போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியதாக அவர் தெரிவித்தார். இந்த லீஷ் பெற்றோர்களாகிய தங்களுக்கு டென்ஷனை குறைத்த அதேநேரம் ஊரைச் சுற்றிப் பார்க்கும் சுதந்திரத்தையும் தனது மகனுக்கு வழங்கியதாக ஜகோட்டா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் “அவன் 3.5 வயதுக் குழந்தை. அவனுக்கு லீஷ் போட்டதில் நாங்கள் வெட்கப்படவில்லை. நியூயார்க் போன்ற நகரத்தில் இது நாங்கள் எடுத்த மிகச் சிறந்த முடிவு. எனது குட்டி பையன் எப்போதும் சுதந்திரத்தை விரும்புகிறான்.

இது அவனுக்கு அதை வழங்கியது. அவன் தொலைந்து போய் விட்டானோ என்று நினைத்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருமுறை நாங்கள் பதறுவதை இது தடுத்தது.

ஒவ்வொரு நொடியும் கைகளைப் பிடித்து கொண்டபடி இல்லாமல் அவனால் சுற்றிப்பார்க்க முடிந்தது. அவன் தொலைந்து போகவும் அவனைக் கடத்தவும் வாய்ப்பில்லை என்பது மன அமைதியைக் கொடுத்தது.

இதில் விஷயம் என்னவென்றால், நாங்கள் தான் லீஷில் இருக்கிறோம் என்று அவன் நினைத்தான். அவன் தன்னை ஷெரிப் என்றும் எங்களைக் கைதிகள் என்றும் கூப்பிட்டுக் கொண்டு இருந்தேன். உண்மையில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்று அவர் கூறினார்.

ஜகோட்டா தனது மகனின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். நெரிசலான இடங்களில் குறுகிய லீஷையும், திறந்த வெளிகளிலும் நீண்ட லீஷை பயன்படுத்தி இருக்கிறார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.