புத்தளம் – பாலாவி – கல்லடி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (27) நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – கல்லடியிலிருந்து பயணித்த லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் 20 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.