பாகிஸ்தானில் நபி பிறந்த நாளில் தற்கொலைத் தாக்குதல்; 52 பேர் பலி!

0
323

பாகிஸ்தானின் – பலோசிஸ்டான் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 52 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 130 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்தில் பலூசிஸ்தானின் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 50 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் மத வழிபாட்டிடத்தில் தற்கொலைத் தாக்குதல்: இதுவரை 52 பேர் பலி | Pakistan Massive Blast 50 Dead

இன்று மஸ்துங் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டை குறிவைத்து குறித்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அந்நாட்டின் காவல்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்பட்டுள்ளது.

மிகவும் கொடூரமான செயல்

காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி இந்த குண்டுவெடிப்பு “மிகவும் கொடூரமான செயல்” என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.