பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்-ரணில் விக்ரமசிங்க

0
400

பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமைர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தனது உரையில்

நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் போது புலனாய்வு அமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.

புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.