பதவியை ராஜினாமா செய்த ICTA தலைவர்!

0
420

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் சமூக ஊடகங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ராஜினாமா அறிவித்தல் வெளியாகி உள்ளது.

இன்று காலை அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அனைத்து இணையத்தளங்களையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு தனது அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்கள் ஜனநாயக உரிமையை முடக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.