பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவியேற்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று காலை பதிவிப் பிரமாணம் செய்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று (23) கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் மேலும் நான்கு பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.