இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் மற்றும் காசாவில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர்களுக்கு பிடியாணை பிறப்பிப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் மற்ற இரண்டு உயர்மட்ட தலைவர்களான முகமது டியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, அல் காசிம் போன்றோருக்கும் பிடியாணை பிறப்பிப்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பரிசீலனை
அத்துடன், அமெரிக்காவுக்கு ஆதரவான நாடொன்றின் தலைவருக்கு எதிராக பிடியாணை கோரிக்கை விடுக்கப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
