நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி !

0
639

தமிழில் மிருகம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆதி, அப்படத்தை தொடர்ந்து ஈரம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறினார்.

மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் பெரியளவில் வரவேற்பை பெற்றது.

அப்பத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.  

மேலும் தற்போது இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாகியுள்ளனர், ஆம் ஆதி மற்றும் நிக்கி காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.