நடிகை கவுதமி பரபரப்பு புகார்: குடும்பத்துடன் சிக்கிய மோசடி நபர்

0
191

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கவுதமி. இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி கொடுத்திருந்த புகாரில்,

‘எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாக கூறினார்.

எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்” என தெரிவித்திருந்தார்.

கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அழகப்பன் அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேரை கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.