தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி செய்வோம்! இந்தியா பகிரங்க அறிவிப்பு

0
617

அயலவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறும் ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்தியாவின் ஆதரவு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

அயலவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கைக்கான உதவி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.