தேர்தல் வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்ய தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல்..

0
344

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் அறிவித்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பதிவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களின் பெயரும் உள்வாங்கல்

அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் தங்கியிருப்பவர்களின் விவரங்கள் அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை , நிரந்தர வதிவிடத்தை மாற்றாதவர்கள், திருமணம், கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றியவர்கள் அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்காளர் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு; வெளிநாட்டில் வசிப்பவர்களும் உள்வாங்க்கப்படவேண்டும் | Notice Election Vote Registration Srilanka

மேலும், வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களின் பெயர்களும் வாக்காளர் இடாப்பில் இடம்பெற வேண்டும் எனவும் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.