தண்ணீர் பட்டாலே உடம்பில் ஏற்படும் பாதிப்பு: அவதியுறும் இளம் பெண்

0
326

அமெரிக்கா – கலிபோர்னியாவை சேர்ந்தவர் டெஸ்ஸா ஹன்சன் எனும் 25 வயதுடைய பெண் சமீபத்தில் தனக்கு இருக்கும் தண்ணீர் அலர்ஜி பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தண்ணீர் பட்டாலே இவர் உடம்பில் ஹைவ்ஸ் என்று கூறப்படும் ரேஷஸ், அலர்ஜி போன்ற சருமம் தடித்துவிடும் என்பதை தெரிவித்திருக்கிறார். மருத்துவ ரீதியாக இதன் பெயர் அக்வாஜெனிக் யூர்டிகார்சியா என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதுமே தோராயமாக 100 – 250 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. லேசாக தண்ணீர் பட்டாலோ அல்லது மழைச் சாரல் உங்கள் மீது பட்டாலும் சருமம் சிவந்து விடும், அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தடிக்கத் துவங்கும்.

முதல் முதலாக இந்த அலர்ஜி 1964ம் ஆண்டு ஒரு நபருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆறு, கடல், மழை என்று நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் மட்டும் இல்லாமல், வியர்வை மற்றும் கண்ணீர் பட்டால் கூட அலர்ஜி ஏற்படும்.

தற்போது 25 வயதாகும் டெஸ்ஸாவுக்கு 8 வயதில் இருந்தே இந்த பிரச்னையோடு வாழ்ந்து வருகிறார். முதல் முதலாக இவருக்கு 8 வயதில் கைகள் மற்றும் தலையில் இந்த அலர்ஜியால் ஏற்பட்ட காயங்கள் ஆறாமல் அப்படியே இருந்தது.

மருத்துவர்கள் டெஸ்ஸா பயன்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்புவினால் இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். ஆனால் இந்த அலர்ஜி குறையாமல் நீங்காமல் நீண்ட காலம் நீடித்தது.

தண்ணீர் பட்டாலே உடம்பில் ஏற்படும் பாதிப்பு: அவதியுறும் இளம் பெண் | Allergic To Water A Suffering Woman

பின்னர் இரண்டு ஆண்டுகள் தீவிரமான பரிசோதனைக்குப் பிறகு இவருக்கு தண்ணீர் அலர்ஜி இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார். எவையெல்லாம் அலர்ஜியை அதிகமாக்கும் என்பதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

வளர வளர இவருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கண்களில் எரிச்சல், நாக்கில் புண் மற்றும் வாயைச் சுற்றி கூட ஹைவ்ஸ் போன்ற அறிகுறிகள் தோன்றத் துவங்குமாம்.

அதிக தண்ணீர் இருக்கும் பானங்களை குடித்தால் கூட இவருக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுமாம். எனவே பால் மட்டும் தான் இவருக்கு ஓரளவுக்கு சரியாக கொழுப்பு, புரதம் கொண்டு சரியான அளவில் இருக்கும். மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்க உணவாக இருந்து வருகிறது.

 அதே போல இவர் நீண்டநேரம் பால் குடிக்காமல் இருந்தால் கூட அதிகமாக தாகம் எடுத்து அதற்கு பதிலாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு வேளை தாகத்தினால் தண்ணீர் குடித்துவிட்டால் தீவிரமான வலி ஏற்பட்டு பலமுறை மயங்கி விழுந்திருக்கிறார்.

மிக மிகக் குறைவான அளவு தண்ணீருடன் இவர் முழுக்க முழுக்க வறண்ட உணவுகளையே சாப்பிட முடியும். திரவ உணவுகளைப் பொறுத்தவரை இவர் பால் அடிப்படையிலான சூப்புகளை மட்டுமே குடித்து வருகிறாராம்.