தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
229

தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (14.03.2024) அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 172,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 188,350 ரூபாவாக காணப்படுகிறது.

கிராம் அளவிலான விலை

மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 20,610 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் தங்கம் 164,850 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை 24 கரட் 1 கிராம் தங்கம் 23,550 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,590 ரூபாவாகவும் உள்ளது.