ஜனாதிபதிக்கு இன்னமும் 6.9 மில்லியன் மக்களின் ஆதரவுள்ளதால் அவர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை ஜோன்ஸ்டன்

0
348

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இன்னமும் 6.9 மில்லியன் மக்களின் ஆதரவுள்ளதால் அவர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகவேண்டியதில்லை,ஜனாதிபதிக்கு இன்னமும் மக்களின் ஆணை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இன்னமும் மக்களின் ஆதரவுள்ளது என்பதை காண்பிப்பதற்கு தேர்தல் இடம்பெறவேண்டும். தற்போது இடம்பெறுபவை சிறிய போராட்டங்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.