சின்னத்திரை வில்லி நடிகை தேவிப்ரியா தனது கணவர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது சன் டிவியின் பூவே பூச்சூடவா மற்றும் ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்களை தொடரில் வில்லியாக நடித்து வருகிறார் தேவிப்பிரியா.
அவர் 90களின் பிற்பகுதியில் சினிமாவில் தான் நடிகையாக களமிறங்கினார். அஜித்தின் வாலி உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்த அவருக்கு அதிகம் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது. தற்போது வரை 50க்கும் அதிகமான சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார்.
தேவிப்பிரியாவின் கணவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.