சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதியளித்த அமைச்சரவை!

0
549

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பான 2021ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதன்படி, இவ் அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு அண்மையில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் அதனை நாடாளுமன்றில் முன்வைப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது