சமயல் எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

0
471

சமயல் எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

“பணம் செலுத்தப்பட்டதால், உள்நாட்டு சமயல் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கும்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களான லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவை கையிருப்பு கிடைக்காத காரணத்தால் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தன.

உற்பத்தியை தொடங்குவதற்கு எரிவாயு சரக்குகளை பெறாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.