சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரங்காவை இலக்கு வைத்த குண்டுத்தாக்குதல்..தந்தையும் மகனும் கைது…

0
549

எல குணா சென்னையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதன் போது அவருடைய மகன் மற்றும் பாதாள உலகக் குழுவைச்சேர்ந்த “பும்மா” என்னும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ம் திகதி இடம் பெற்ற மக்கள் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் சித்தையா குணசேகரம் எனும் கிம்புலா எலே குணாவை கைது செய்வதற்காக இரகசிய காவற்துறையினர் தேடி வந்த சந்தர்ப்பத்தில் அவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.