க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஒத்திவைப்பு! கல்வி அமைச்சர் முக்கிய அறிவித்தல்

0
724

தற்போது நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளை ஒத்தி வைக்கும் தீர்மானம் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டின் காரணமாக பரீட்சைகள் ஒத்திவைப்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.