அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன வெளியிட்டுள்ளார்.
சபையின் தலைவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தடுக்கும் வகையில் நடவடிக்கை
ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.