களுத்துறை – கட்டுக்குருந்த பகுதியில் நேற்றிரவு (20) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
உந்துருளியில் பயணித்த இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் வீட்டில் வைத்து குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.