கரூர் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் காரணமில்லை என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பேட்டியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூர் சம்பவத்துக்கு நாம் அனைவரும் தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டம் திரட்டுவதைப் பெரிய விடயமாகக் காட்டுவதை நிறுத்த வேண்டும் என அஜித் குமார் வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் கூட்டம் கூடினால் இவ்வாறு நிகழ்வதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் திரையரங்குகளில் முதல் காட்சி மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மாத்திரம் ஏன் இப்படி நிகழ்கிறது என அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த விடயங்கள் திரையுலகை தவறாகக் காட்டவே முயல்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். இரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். எனவே உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.



