கடதாசி தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

0
351

கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் உதவியை நாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடவியலாளர் சந்திப்பின் போது கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க இந்த விடயத்தினைக் குறித்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கடதாசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.