கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர்

0
456

பரீட்சைத் தாள்கள் அச்சிடுவதற்கான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளன என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் பரீட்சைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.