வெளிமாவட்டங்களில் இருந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வரும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவதற்கு தமக்கு வெறும் 15 லீற்றர் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார் “இந்த எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக் கொண்டு நான் இடையில் அனுராதபுரத்தில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த வாரமே கொழும்புக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் ஜகத் விக்கிரரத்ன, இந்த விடயம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் கிடைத்தவுடன் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



