எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு!

0
371

எரிபொருளை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணத்துடன் எரிபொருள் வரிசையில் நடந்த 5 வது சம்பவமாக இந்த மரணம் பதிவாகியுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த 85 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் காத்திருந்த மூன்று பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.