உலகை உலுக்கிய அவுஸ்திரேலிய தாக்குதல்; உயிரிழந்த தாக்குதல்தாரி இந்தியர்!

0
22

அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் சாஜித் அஹ்​ரம் (50) என்ற நபர் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக் கொண்டவர் என்​பது தெரிய​வந்​துள்​ளது. சந்தேக நபர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தில் சாஜித் அஹ்ரம் என்​பவர் ஹைத​ராபாத்​தின் டோலிசௌகி நகரத்தை பூர்​வீக​மாக கொண்​ட​வர். கடந்த 1998-ம் ஆண்டு மாணவர் விசா​வில் அவர் அவுஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​விட்​டார்.

இதையடுத்து அவருடைய குடும்​பத்​தினருட​னான தொடர்பு குறை​வாகவே இருந்​துள்​ளது. இரண்டு அல்​லது மூன்று முறை மட்​டுமே இந்​தியா வந்​துள்​ளார். இவர் இறு​தி​யாக கடந்த 2022ஆம் ஆண்​டில் இந்​தி​யா​வுக்கு வந்​துள்​ளார்.

சாஜித் அஹ்​ரமின் மகன் நவீது கடந்த 2001 இல் அவுஸ்​திரேலி​யா​வில் பிறந்​தவர். எனவே அவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை வழங்கப்​பட்​டு உள்​ளது. சாஜித் அஹ்​ரம் ஹைத​ரா​பாத்​தில் வணி​க​வியலில் இளங்​கலை பட்​டப்​படிப்பை முடித்​தவர்.

அவுஸ்​திரேலி​யா​வுக்கு இடம்​பெயர்ந்த பின்​னர் அவர் ஐரோப்​பிய பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். அவரிடம் இன்​னும் இந்திய கடவுச்சீட்டு உள்​ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை தாக்குதல் தாரிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என முன்னர் தகவ்ல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இந்தியர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.