மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்காக விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விஜேவிக்ரம (Wijewikrama) அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த திட்டமானது, மருந்துகளுக்காக போலி பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய நடைமுறை
இந்நிலையில், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படும் சகல மருந்துகளிலும் குறித்த ஸ்டிக்கர் பதிக்கப்பட்டிருக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
