உக்ரைன் – ரஷ்யா போரில் இருந்து தப்பி அகதியாக சென்ற இளம்பெண் இரண்டு பேரால் கப்பலில் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து உக்ரைனை சேர்ந்த பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
அந்த வகையில் உக்ரைனை சேர்ந்த 18 வயதான இளம்பெண் நாட்டிலிருந்து தப்பி ஜேர்மனி ஹொட்டல் கப்பலில் சென்றிருக்கிறார். அவருடன் மேலும் 25 அகதிகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கப்பலில் இருந்த ஈராக் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த 37 மற்றும் 26 வயதுடைய இரு ஆண்கள் அப்பெண்ணை சீரழித்துள்ளனர்.
இருவருக்குமே உக்ரைன் குடியுரிமையும் இருந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்த ஜேர்மனி பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.



