இலங்கை வைத்தியசாலை நிலை கண்டு மனம் கலங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0
633
இலங்கை வைத்தியசாலை நிலை கண்டு மனம் கலங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Jaisangar), இலங்கை வைத்தியசாலை ஒன்று வெளிட்யிட்ட செய்தியை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது என்ற செய்தியை கோடிட்டே, ​இந்திய வெளிவிவகார அமைச்சர் கீழ்கண்டவாறு டுவிட் செய்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேயை (Gopal Bagley) தொடர்பு கொண்டு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.