இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசி வழங்கும் சீனா!

0
438

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடிவை நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம்  எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.