இலங்கையில் திடீரென அதிகரித்த இரு மரக்கறிகளின் விலை!

0
132

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ள நிலையில், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் திடீரென அதிகரித்த இரு மரக்கறிகளின் விலை! | Two Vegetables Price Suddenly Increase Sri Lanka

அதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோ பச்சை இஞ்சி 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் திடீரென அதிகரித்த இரு மரக்கறிகளின் விலை! | Two Vegetables Price Suddenly Increase Sri Lanka

எனினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.