இலங்கையிருந்து கடல்வழியாக தப்பிச் செல்லும் அகதிகள்! இந்திய காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

0
505

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிருந்து கடல்வழி தப்பிச் செல்லும் அகதிகளை கண்டறிய இந்தியாவின் கேரள மாநில கடலோர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிஞ்சம் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கரையோரப் பகுதிகள் இலங்கைப் பிரஜைகளை ஏற்றிச் செல்லும் படகுகள் கரையைக் கடக்கக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை அகதிகள் தொடர்பிலான கொள்கையை மத்திய அரசு விரைவில் வகுக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அண்மையில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக கடல் வழியாக இந்தியா சென்றிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.