மேஷம்
இன்று நீங்கள் முன்னெடுக்கும் வேலைகளில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படும். சில விஷயங்களால் மன அழுத்தம் குறையும். சொத்து வியாபாரிகளுக்கு இன்று அதிக லாபம் தரும். அதிகப்படியான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசியினர் இன்று நீங்கள் முடிவெடுப்பதில் சாதகமான பலன்கள் அமையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செயத பழைய முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பெறலாம். சில நேரங்களில் மனம் சலனமாக இருக்கும். மன சஞ்சலத்தை விலக்கி தியானத்தில் இருக்க பழகுங்கள். சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சிறந்த அனுபவத்தைப் பெறலாம்.
மிதுனம்
இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். இந்த நேரத்தில் எந்த ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் இருந்தால் அதில் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். விரைவான வெற்றியைப் பெறுவதற்காக நெறி தவறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையுடன் இருப்பீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். எதிர்காலத் திட்டங்களுக்காக உங்களுக்காக நேரம் ஒதுக்கி அதற்கான வேலை செய்யுங்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். நீங்கள் வேலை மாற்றத்திற்கான முயற்சிகளில் இருந்தால் அது சாதகமாக அமையும். இறைவனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கவனமாக இருக்கவும்.
சிம்மம்
இந்த நாளில் உங்கள் எல்லா வேலைகளும் எளிதாக முடியக்கூடிய வாய்ப்புள்ளது. இன்று வியாபாரிகளுக்குச் சிறப்பான லாபம் கிடைக்கும். பணப் பரிவர்த்தனை செய்யும் போது ஒருவரை சாட்சியாக வைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து எதிர்காலம் காலம் குறித்த சில புதிய திட்டமிடல்களில் ஈடுபடுவீர்கள். தொண்டு செய்யும் எண்ணம் அதிகரிக்கும். வேலை தேடும் முயற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். விரும்பியவரை வாழ்க்கைத் துணையாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியினர் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். வியாபாரிகளின் சமுக வட்டம் அதிகரிக்கும். பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் செலுத்தவும். சமூகத்தில் உயர்நிலையில் இருக்கக்கூடிய ஒருவரின் ஆதரவும், பாராட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டவும்.
துலாம்
துலாம் ராசியினர் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீட்டில் ஈடுபடுவீர்கள். வீட்டில், பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். உங்கள் வேலைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். எதிரணியினர் உங்களை இழிவுபடுத்த முயற்சி செய்யலாம். கவனம் தேவை. மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரை, பாடம் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலரை நம்பி ஏமார்ந்து மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் யாரும் எதிர்பாராத அபார வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மற்ற நாட்களை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான செய்திகள் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் நெருக்கமும், அவர் பார்வையில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தாயுடன் பேசுவது, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
தனுசு
இன்று நீங்கள் உங்கள் வேலையை நேர்மையாகச் செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் நடத்தையில் அதிக நேர்மை இருக்கும். பண விஷயத்தில், பேராசையைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதை தவிர்க்கவும். ஆபத்தான மற்றும் பிணைய செயல்களைத் தவிர்க்கவும். உங்கள் காதலியுடன் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம். குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
மகரம்
இன்று சில சூழ்நிலைகள் உங்களுக்கு பாதகமாக அமையும். உங்களின் நிதி மற்றும் குடும்ப நிலைமையை மேம்படுத்தக் கூடுதல் முயற்சிகள் தேவைப்படும். பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களில் கூடுதல் கவனம் தேவை. வீட்டிற்கு புதிய விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இளைஞர்கள் விரும்பிய வேலைவாய்ப்பைப் பெறலாம்.
கும்பம்
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் தினசரி வேலைகளை சரியான திட்டமிடல் தேவை. சில மாற்றங்கள் வெற்றியைத் தருவதாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய விஷயங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டின் பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும். திருமணம் குறித்த பேச்சு வார்த்தை சுப பலன் தருவதாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வியாபாரிகள் சட்ட விரோதமான செயல்களில் இருந்து விலகி இருக்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.