இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற டென்மார்க் யுவதி!

0
73

இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் (Victoria Kjaer Theilvig) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை. 21 வயதாகும் அவர், நடனமணி, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர்.

மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். அதேவேளை பிரபஞ்ச அழகி இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் மாணவி ஆவார்.

போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர்.