இந்தியத் தூதுவர் – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு – சமகால நிலைமை பற்றி விளக்கம்

0
24

இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் நேற்று செவ்யாக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், ச.குகதாசன், து.ரவிகரன், மருத்துவர் இ. சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் எடுத்துக் கூறினர். மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் பிற்போடப்படுகின்றமை குறித்தும் விளக்கிக் கூறியுள்ளனர். அனைத்து விடயங்களையும் தூதுவர் செவிமடுத்தாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.