சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.