தென்னிந்திய பிரபல நடடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன், கூட்டணியில் இணைவதே சிறந்த முடிவு என விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்கு வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயுடன் கூட்டணி அமைக்க ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சி விருப்பம் வெயிளியிட்டிருந்தது.
எனினும் விஜய் அறிவித்த கட்சிக் கொள்கைளால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விஜய் எதிர்ப்பு அரசியலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கையில் எடுத்துள்ளார்.
இதையடுத்து, விஜயுடன் கூட்டணி அமைக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே விஜயுடன் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் மகன் உள்ளிட்டோர் ரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் கூட்டணி பேச்சில் முட்டுக்கட்டை விழுந்தது.
இந்நிலையில், விஜய் கட்சியில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் விஜய் ஆதரவு தொழிலதிபர்கள், கிறிஸ்துவ அமைப்புகள் தரப்பில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் சேருமாறு விஜய்க்கு அழுத்தம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணி அமைத்தால் 60 தொகுதிகள் வரை வெல்வதற்கு வாய்ப்புள்ளது எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பும் கிடைக்கும். அதை வைத்து அரசியல் செய்து அடுத்த தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட முடிவும்.
இப்போது கோட்டை விட்டால் தமிழக வெற்றிக் கழகத்தால் ஒருபோது எழுந்து நிற்க முடியாது என விஜய்க்கு அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர்.
இதனால் விஜய் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. தன் இறுதி திரைப்பட படப்பிடிப்பில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அது முடிந்ததும் கூட்டணி முடிவை தெரிவிப்பதாக தன்னை சந்திப்பவர்களிடம் கூறி வருகிறார்.