இலங்கைக்கு 100 மில்லியன் டொலரை வழங்கும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி!

0
585

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பலதரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து, அரச வங்கிகளுக்கான அந்நிய செலாவணி கையிருப்பு ஆதரவை இலங்கை கோரிவருகிறது.

இந்த நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தலைவர் உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.