Vellore district government Anakkadu enjoying beach indiatamilnews
வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் உள்ள அரசு உண்டு, உறைவிடப் பள்ளி மாணவிகள், முதல்முறையாக கடற்கரையை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான நந்தகுமார், அவரது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மலைவாழ் மாணவிகளை சென்னையிலுள்ள மெரினா கடற்கரைக்கு தனது சொந்த செலவில் நேற்று அழைத்து வந்தார்.
இதன்படி, அணைக்கட்டு அரசுப் பள்ளியில் படிக்கும் ஜார்தான்கொள்ளை, பலாம்பட்டு, பீஞ்சமந்தை ஆகிய 3 மலை கிராமங்களை சேர்ந்த 55 மாணவிகள், முதல்முறையாக கடலைக் கண்டு ரசித்து வியப்படைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும், மாமல்லபுரத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். இதுகுறித்து கேட்டபோது, வாழ்க்கையில் முதன்முறையாக கடற்கரையை கண்டு ரசித்தது மகிழ்ச்சி அளித்ததாக அந்த மாணவிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அவசர மருத்துவ தேவைக்கும், பள்ளிக்கு செல்வதற்கும்கூட சாலை வசதி இல்லாத இந்த மலைவாழ் கிராமங்களை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Vellore district government Anakkadu enjoying beach indiatamilnews
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- அதிகார வெறியில் அ.தி.மு.க ஆட்சி! – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது! சி.பி.எம்..!
- கேரள மாநிலக் கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு…!
- ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும்! – எஸ்.வி.சேகரை கண்டித்த நீதிபதி…!
- விவசாயப் பொருள்களின் விலைகள் உயர்வு! – மோடி அரசின் அறிவிப்புகள்! (விவரம்)
- தள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி! – குமாரசாமி அறிவிப்பு!
- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்! – விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!
- சேலம் 8 வழிச்சாலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல்! (காணொளி)
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :