முதன்முறையாக கடலைக் கண்டு ரசித்த மாணவிகள்

0
405
Vellore district government Anakkadu enjoying beach indiatamilnews

Vellore district government Anakkadu enjoying beach indiatamilnews

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் உள்ள அரசு உண்டு, உறைவிடப் பள்ளி மாணவிகள்,  முதல்முறையாக கடற்கரையை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான நந்தகுமார், அவரது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மலைவாழ் மாணவிகளை சென்னையிலுள்ள மெரினா கடற்கரைக்கு தனது சொந்த செலவில் நேற்று அழைத்து வந்தார்.

இதன்படி, அணைக்கட்டு அரசுப் பள்ளியில் படிக்கும் ஜார்தான்கொள்ளை, பலாம்பட்டு, பீஞ்சமந்தை ஆகிய 3 மலை கிராமங்களை சேர்ந்த 55 மாணவிகள்,  முதல்முறையாக கடலைக் கண்டு ரசித்து வியப்படைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும், மாமல்லபுரத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். இதுகுறித்து கேட்டபோது, வாழ்க்கையில் முதன்முறையாக கடற்கரையை கண்டு ரசித்தது மகிழ்ச்சி அளித்ததாக அந்த மாணவிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அவசர மருத்துவ தேவைக்கும்,  பள்ளிக்கு செல்வதற்கும்கூட சாலை வசதி இல்லாத இந்த மலைவாழ் கிராமங்களை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vellore district government Anakkadu enjoying beach indiatamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :