இந்தியன் 2 படத்திற்கு டப்பிங் பேசும் கமல்ஹாசன்

0
215

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு டப்பிங் செய்யும் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்கள் கழித்து விறுவிறுப்பான நடந்து வருகிறது.

இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், படக்குழு காணொளியை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.