ரணில் இன்னமும் எம்மிடம் ஆதரவை கோரவில்லை: நாமலுக்கு காலம் உள்ளது – மஹிந்த

0
40

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வெற்றி வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவின் ஆதரவை இதுவரை கோரவில்லை என்றும் கூறினார்.

இதேவேளை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அவர் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

“எமது வேட்பாளர் இளைஞரா அல்லது நடுத்தர வயதுடையவரா என்பது முக்கியமில்லை. ஆனால் ஒரு வெற்றிபெறும் வேட்பாளரை பெயரிடுவோம்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“நாமல் ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, முடிவு கட்சியிடம் உள்ளது. அவர் (நாமல்) இன்னும் காத்திருக்க வேண்டும்” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.