20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டுபாயில் பிரமாண்டமாக நிறைவடைந்தது.
இதில் கலந்து கொண்ட இலங்கை அணியினர் நேற்று (29) அதிகாலை நாடு திரும்பினர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 5 பதக்கங்களை இலங்கை அணி வெற்றிகொள்ள முடிந்தது.
பெண்களுக்கான முப்பாச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கையின் நேத்மிகா மதுஷானி இலங்கைக்கான முதல் பதக்கத்ததை பெற்றவராவார்.