அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் சூறாவளி தாக்கி 4 பேர் பலி ; அவசர நிலை பிரகடனம்

0
57

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில்  ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. 

ஓக்லாஹோமா  மாநிலம் முழுவதும் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர்.

20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 5,000 மக்கள் வசிக்கும் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது.அங்கு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஓக்லஹோமா அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக  வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.