ஈஸ்டர் தாக்குதல்; அரசாங்கமும் ஒத்துழைத்ததா? – சபையில் அனுரகுமார பரபரப்புத் தகவல்

0
31

”உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பின்புலத்தில் இருந்தவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொண்டு உண்மைகள் கண்டறியப்படாவிட்டால் இலங்கைத் தீவு தினம் தினம் அச்சுறுத்தலில் இருக்கிறது என்பதே அர்த்தம்.” என ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,

”2015ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை ராஜபக்சர்கள் உருவாக்கி கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர்.

முஸ்லிம் ஆக்கிரமிப்புகள், கருத்தடை கொத்து, கருத்தடை உடைகள், கருத்தடையை மேற்கொள்ளும் வைத்தியர்கள் தொடர்பில் கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர்.

அரச அதிகாரிகள் ஒருதரப்பினர் இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக உருவான மனநிலையின் இறுதி வெளிப்பாடுதான் உயிர்த்த ஞாயிறுதின தாக்கதல்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பெறுபேறுகள் வெளியான போதிலும் பெறுபேறுகள் அனைத்தும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியே எழுதப்பட்டுவிட்டன.

இதனால் இந்த விடயத்தை அரசியலுடன் தொடர்புப்படாத அல்லது தேர்தலுடன் தொடர்புப்படாத ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தச் செயல்பாட்டில் சில அரசியல் சந்தேகங்கள் உள்ள பகுதிகளும் உள்ளன.

இந்தத் தாக்குதல்களுக்கு காரணமான இரண்டு தரப்பினர் உள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுபாப்பு படையினர் மற்றும் அரச அதிகாரிகள் ஒருதரப்பினர். அச்சுறுத்தல் உள்ள ஒரு நாடாகும்

போராட்டத்தை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. உரிய புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னரும் இவர்கள் செயல்பட்டிருக்கவில்லை. இரண்டாவது தரப்பினர் தாக்குதல்களை நடத்தியவர்களாகும்.

இந்த செயல்பாட்டில் தாக்குதல்தாரிகள் மற்றும் தாக்குதல்களை தடுக்கக் கூடியவர்கள் ஒன்றிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தால் அதனை தடுக்க முடியாது.

நாட்டை அராஜகத்துக்குள் தள்ளவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தால் இது பாரிய குற்றமாகும். இது அவ்வாறு இருந்திருந்தால் இந்த நாடு தினம் தினம் அச்சுறுத்தலில் உள்ள ஒரு நாடாகும் என்பதே அர்த்தம்.

இந்த தாக்குதல்களை தாக்குதல்களை தடுக்கக் கூடியவர்களும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களும் இணைந்து நடத்தியுள்ளனரா என்ற சாதாரண சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. ஆகவே இந்த தாக்குதல்களின் பின்புலத்தில் இருக்கும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.” என்றார்.